அமெரிக்காவின் 245வது சுதந்திர தினம்; மோடி வாழ்த்து

by Editor / 04-07-2021 06:07:13pm
அமெரிக்காவின் 245வது சுதந்திர தினம்; மோடி வாழ்த்து

1776ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி அமெரிக்கா சுதந்திரம் பெற்றது. இதன் 245வது ஆண்டு சுதந்திர தினம் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் வெளயிட்டுள்ள வாழ்த்து பதிவு: 245வது சுதந்திர தினத்தையொட்டி அதிபர் ஜோ பைடனுக்கும், அமெரிக்க மக்களுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆற்றல் மிகுந்த ஜனநாயக நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் சுதந்திரத்தின் மதிப்புகளை பகிர்ந்துகொள்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான நட்புறவு, உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வாறு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

 

Tags :

Share via

More stories

Logo