கருணாநிதி நினைவு தினம் - கவிஞர் வைரமுத்து ட்வீட்

by Staff / 07-08-2023 12:15:34pm
கருணாநிதி நினைவு தினம் - கவிஞர் வைரமுத்து ட்வீட்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்வீட்டர் பக்கத்தில், “சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன. கலைஞர் ஒரு தத்துவம். இன்று இருமொழிக் கொள்கை என்ற தத்துவம். தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும் இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார். இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு. அணைய விடாதீர்.. நெருப்பை அரிப்பதில்லை கரையான்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via