தமிழகத்தில் உள்ள மது பார்கள் டெண்டர் விடுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக கூறி அமைச்சர் வீடு முற்றுகை

by Writer / 03-01-2022 12:23:45pm
தமிழகத்தில் உள்ள மது பார்கள் டெண்டர் விடுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக கூறி அமைச்சர் வீடு முற்றுகை

தமிழகம் முழுவதும் உள்ள, 5400க்கும் அதிகமான டாஸ்மாக் மதுக்கடைகளில், சுமார், 4500க்கும் மேற்பட்ட கடைகளில் தற்போது 'பார்'கள் உள்ளன. இந்த 'பார்'களுக்கு மாவட்ட வாரியாக டெண்டர் விடப்படுவது வழக்கம்.

அதாவது, மதுக்கூடத்திற்கான (பார்) குத்தகைத் தொகை, அந்த மதுக்கடையின் மது விற்பனையின் அளவைப் பொறுத்தே நிர்ணயம் செய்வது வழக்கம். இந்த தொகையானது மது விற்பனைக்கு ஏற்ப ஆண்டுதோறும் மாறுபடும். ஆனால், பல ஆண்டுகளாக இந்த ஏல தொகை உயர்த்தப்படவில்லை என கூறப்பட்டு வரும் நிலையில், முறையாக 'பார்'களுக்கான குத்தகைத் தொகையும் வசூலிக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், மது கூடங்கள் (பார்) டெண்டர் விடுவதில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ள நிலையில், இந்த முறைக்கேட்டால் பார்களில் பணியாற்றி வந்த 3 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னையில் உள்ள குடியிருப்பு முன்பு தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த அபிராமபுரம் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள மது பார்கள் டெண்டர் விடுவதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக கூறி அமைச்சர் வீடு முற்றுகை
 

Tags :

Share via