பா.ஜ.கவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது - மு.க.ஸ்டாலின்

by Staff / 18-05-2024 12:24:26pm
பா.ஜ.கவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது - மு.க.ஸ்டாலின்

வெற்றி முகத்தை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பதவியின் கண்ணியத்தை மறந்து நாளொரு பொய்ப் பரப்புரையை பேசி வருகிறார் பிரதமர் மோடி என்று தமிழக முதலமைச்சர் மு..க.ஸ்டாலின்  எக்ஸ் தளத்தில் , 'பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் - அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள்.மதவெறுப்புப் பரப்புரை கைகொடுக்காததால், அடுத்ததாக மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியைப் கையில் எடுத்திருக்கிறார். பாஜகவின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது; பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்' என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via