விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை - மருத்துவர் சஸ்பெண்ட்

by Staff / 18-05-2024 12:20:45pm
விரலுக்கு பதில் நாக்கில் அறுவை சிகிச்சை - மருத்துவர் சஸ்பெண்ட்

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் 4 வயது சிறுமி விரலில் அறுவை சிகிச்சை செய்வதற்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், மருத்துவர் பிஜான் ஜான்சன் என்பவர் விரலுக்குப் பதில் தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து சிறுமி வெளியே அழைத்து வரப்பட்டார். அப்போது அவரது வாயில் பஞ்சு திணிக்கப்பட்டு இருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, சிறுமியின் குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் மருத்துவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

 

Tags :

Share via

More stories

Logo