கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

by Admin / 27-08-2021 03:52:54pm
கேரளாவில் 4 நாட்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு

இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 30-ந் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கேரளாவில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
 
அதன்பின்பு மாநிலம் முழுவதும் விட்டுவிட்டு பெய்த மழை மலையோர மாவட்டங்களில் மட்டும் அதிகமாக பெய்து வந்தது. ஜூலை மாத மத்தியில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்த மழை பின்னர் விட்டுவிட்டு பெய்தபடி இருந்தது.

இந்த நிலையில் கேரளா முழுவதும் இன்று முதல் 30-ந் தேதி வரை 4 நாட்களுக்கு மிக பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

அதன்படி திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, மலப்புரம், வயநாடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வானிலை நிலவரம்

இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு நாளை முதல் 30-ந் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நாட்களில் மாநிலம் முழுவதும் 64.5 மி.மீ. முதல் 114.5 மி.மீ. வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பேரிடர் மேலாண்மை துறையினர் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். 24 மணி நேரமும் அவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

 

Tags :

Share via