கவின் ஆணவக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த கொலையாளி தாயார் கிருஷ்ண குமாரிகைது
இன்று திருநெல்வேலி கவின் ஆணவக் கொலை வழக்கில் 10 மாதங்களாக தலைமறைவாக இருந்த காவல் உதவி ஆய்வாளரும் கொலையாளியின் தாயார்மான கிருஷ்ண குமாரி சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் சென்னை மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வந்தார் கவினும் பாளையங்கோட்டை கேடிசி நகரை சேர்ந்த சித்த மருத்துவர் சுபாஷினியும் காதலித்து வந்தனர். மாற்றுச்சாதி காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடும் எதிர்ப்பு நிலவியதால் கடந்த 2025 ஜூலை 27 அன்று பாளையங்கோட்டையில் கவின் கொடூரமாக வெட்டி செய்யப்பட்டார்.. கொலையை நேரடியாக செய்த காதலியின் தம்பி சுர்ஜித் குண்டர் சப்தத்தில் சிறையில் உள்ளார். காதலியின் தந்தை காவல் உதவி ஆய்வாளரான இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். ஜெயபால் என்கிற இவரது உறவினர் ஆதாரங்களை மறைக்க உதவியதால் அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.. காதலியின் தாயார் கிருஷ்ணகுமாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த அவரை தற்பொழுது சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :



















