14 மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மாற்றம்
தமிழ்நாட்டில் 14 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உட்பட 30 க்கு மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.மதுரை மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் திருச்சி ஆட்சியராக பிரதிக் தயால் கன்னியாகுமாரி ஆட்சியராக பிரதாப் நாகப்பட்டினம் ஆட்சியராக பிரவீன் குமார் தேனி ஆட்சியராக வைத்தியநாதன் தர்மபுரி ஆட்சியராக சரவணன் திருப்பத்தூர் ஆட்சியராக ரவிக்குமார் கரூர் ஆட்சியராக முத்துக்குமரன் ஆகியோ நியமிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்து சமய அறநிலை துறை ஆணையராக டிஜி வினையும் ஊரக வளர்ச்சித் துறை ஆணையராக அமுதவல்லியும் மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னியும் விவசாய சந்தை மற்றும் விவசாய வணிகத்துறை இயக்குனராக சந்திரசேகர் சகமுரி, சுகாதாரத்துறை திட்ட இயக்குனராக உமா நகரபஞ்சாயத்து துறை இயக்குனராக பிரியங்கா பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலராக சுந்தரவல்லி நிதித்துறை சிறப்பு செயலாளராக லலிதா நிதித்துறை இணைச் செயலாளர்கள் கமல் கிஷோர், பிரசாந்த் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :


















