ரூ.2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்

by Staff / 09-10-2023 12:28:05pm
ரூ.2.45 கோடி மதிப்பிலான கைக்கடிகாரங்கள் பறிமுதல்

2020-ம் ஆண்டு சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான புகாரில் முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்.பி.யுமான ஜெகத்ரட்சகனின் வீடு, ஹோட்டல் உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது. திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடத்திலிருந்து ரூ. 2.45 கோடி மதிப்பிலான 7 கைக்கடிகாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெகத்ரட்சகன் மகள் ஸ்ரீநிஷாவிற்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் இருந்து கட்டுக்கட்டாக 2,000 ரூபாய் நோட்டுகள் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo