மாவட்ட ஆட்சியர்களுடன்  நாளை முதல்வர் ஸ்டாலின். அவசர ஆலோசனை

by Editor / 22-05-2021 05:22:13pm
மாவட்ட ஆட்சியர்களுடன்  நாளை  முதல்வர் ஸ்டாலின். அவசர ஆலோசனை



தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம்,அதாவது மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது திங்கட்கிழமை காலை முதல் அமலுக்கு வருகிறது.
இதனையடுத்து நாளை   மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார். வருகின்ற திங்கட்கிழமை முதல் தளர்வுகள்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

 

Tags :

Share via