விஜய்க்கு மாலை அணிவித்த ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு.
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்றைய முன்தினம் திருவாரூர் தெற்கு வீதியில் பரப்புரை மேற்கொள்வதற்காக வருகை தந்த பொழுது திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அழகிரி காலனி பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் மதன் ஜேசிபி இயந்திரத்தின் மூலமாக ஆள் உயர மாலையை விஜய்க்கு அனுவித்தார்.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவின் கீழ் மாவட்ட செயலாளர் மதன் ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் ராஜேஷ் மற்றும் மனோ அன்பு உள்ளிட்ட நான்கு பேர் மீது திருவாரூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Tags : விஜய்க்கு மாலை அணிவித்த ஜேசிபி இயந்திரத்தின் உரிமையாளர் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு



















