சுரண்டை :அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் சக மாணவிகளின் மடியிலேயே ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சோகம் -

by Editor / 05-04-2025 05:34:13pm
சுரண்டை :அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் சக மாணவிகளின் மடியிலேயே ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சோகம் -

தென்காசி மாவட்டம் சுரண்டை அடுத்து உள்ள இரட்டைக் குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கேரளாவில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மானசா என்ற பெண் குழந்தையும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் மானசா சுரண்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயினறு வருகிறார்.

இந்த நிலையில் இன்று பள்ளிக்கு வீட்டிலிருந்து தனது சைக்கிளில் சென்றுள்ளார் தொடர்ந்து வகுப்பறையில் சக மாணவிகளுடன் பேசி சிரித்து கொண்டிருந்த மாணவி மானசா திடீரென மயக்கம் அடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்த பொழுது மாணவி மானசவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முற்பட்ட நிலையில் மாணவி உயிரிழந்ததாக  தெரிவித்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து சுரண்டை காவல் துறையினர் பள்ளிக்கு நேரடியாக வந்த நிலையில் மாணவி மானசாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக தென்காசி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணையை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் சக மாணவிகளின் மடியிலேயே ஒன்பதாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சோகம் -

Share via