தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வானிலை மையம்.

by Editor / 05-04-2025 05:33:19pm
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வானிலை மையம்.

தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

 

Tags : தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும் என்று வானிலை மையம்

Share via

More stories