நிலச்சரிவு குறித்து தகவல் அளித்த பெண் பலி
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக முதலில் தகவல் கொடுத்த பெண் உயிரிழந்துள்ளார். சூரல்மலை கிராமத்தை சேர்ந்த நீது ஜோஜோவின் உடல் 2 தினங்களுக்கு முன் மீட்கப்பட்டுள்ளது. இவரது கணவர், மகன், பெற்றோர் உயிர்தப்பிய நிலையில் நீது ஜோஜோ மண்ணில் புதைந்து உயிரிழந்துள்ளார். கடந்த 30ஆம் தேதி நிலச்சரிவு தொடர்பாக விம்ஸ் நிறுவனத்தில் நீது தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து நீது அளித்த தகவலின் அடிப்படையில் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Tags :