ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு.

by Staff / 19-07-2024 05:38:19pm
ஆகஸ்ட் 5 உள்ளூர் விடுமுறை; ஆட்சியர் அறிவிப்பு.

தூத்துக்குடியில் உள்ள புகழ்பெற்ற தூய பனிமய மாதா திருத்தலப் பேராலய பெருவிழா ஆகஸ்ட் 5-ம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு 05. 08. 2024 திங்கட்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள் / பணியாளர்களுக்கு இவ்விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது. இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாள் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த விடுமுறைக்குப் பதிலாக 10. 08. 2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ. லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via