துருக்கி - சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்..தொடரும் உயிரிழப்பு..

by Editor / 21-02-2023 07:08:47am
துருக்கி - சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம் - அச்சத்தில் மக்கள்..தொடரும் உயிரிழப்பு..

துருக்கியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவான நிலநடுக்கத்தில், துருக்கியில் மட்டும் 40,689 பேர் உயிரிழந்தனர். சிரியாவில் 3688 பேரும் உயிரிழந்தனர். துருக்கியில் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாகாணங்களைத் தவிர மற்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் நேற்று நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் திங்கள்கிழமை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. தெற்கு ஹடாய் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்திய நேரப்படி, 10.54 நிமிடங்களுக்கு அடுத்தடுத்து மீண்டும் மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 மற்றும் 5.8 அலகுகளாக பதிவாகியிருந்தன. இதில், துருக்கியில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 213 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சர் சுலேய்மான் சோய்லு தெரிவித்துள்ளார். கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக் கொண்டனர். சிரியாவிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கடந்த இரண்டு வாரங்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்அதிர்வுகள் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Tags : Turkey - Earthquake again in Syria - People in fear.. Continued loss of life..

Share via