குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் குளிக்கச் சென்ற வாலிபர் மீது மரம் விழுந்து பலி.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான குண்டாறு நீர்த்தேக்க பகுதியில் மழையின் காரணமாக இங்கு உள்ள அனைத்து நீர்நிலைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலம் வரும் அனைவரும் குண்டாறு நீர் தேக்கத்திற்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் குண்டாறு நீர் தேக்கத்திலும் அதன் தொடர்ச்சியாக உள்ள அருவிகளிலும் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குண்டாறு பகுதிக்கு இன்று திரண்டு வந்திருந்தனர்.இந்த நிலையில் விடுமுறை தினமும் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குண்டாறு நீர்த்தேக்க பகுதிக்கு இன்று திரண்டு வந்திருந்த நிலையில் செங்கோட்டை மேலூர் பகுதியைச் சார்ந்த சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் குண்டாறு நீர்த்தேக்க பகுதிக்கு குளிக்க சென்று இருந்தனர் 36 என்று சொல்லக்கூடிய பகுதியில் உள்ள தனியார் அருவியை ஒட்டி உள்ள ஆற்று படுகையில் குளித்துவிட்டு வரும்பொழுது திடீரென ஆற்றுக்கரையின் அந்த பகுதியில் இருந்த ராட்சச மரம் ஒன்று திடீரென செங்கோட்டை மேலூர் பகுதியைச் சேர்ந்த நவாஸ் என்பவர் மகன் முகமது தமீம் ஷேக் என்பவர் மீது சாய்ந்து விழுந்தது இதில் சம்பவ இடத்திலேயே முகமது சமீம் ஷேக் பலியானார் தொடர்ந்து அவர் உடன் வந்து அனைவரும் கூச்சல் போட்டு அலறவே. அவரை மீட்பதற்கு முடியவில்லை தொடர்ந்து இருபதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து மரத்தை அப்புறப்படுத்த நினைத்து முடியவில்லை இதனை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து மரத்தை அறுக்கும் இயந்திரம் கொண்டு வந்து மரத்தை அறுத்து இவரது உடலை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் இங்கு வந்த பொழுது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து தகவல் அறிந்து செங்கோட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.தொடர்ந்து குண்டாறு நீர்தேக்கப்பகுதியில் உள்ள அருவிகளுக்கு குளிக்க செல்ல கடந்த மாதம் தடை விதித்துள்ள நிலையில் இந்த தடை சில நாட்களிலே அகற்றப்பட்டதால் இந்த சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது .
Tags :





.jpg)













