ரயில் மோதி பள்ளி மாணவி பலி

by Staff / 05-05-2023 03:48:25pm
 ரயில் மோதி பள்ளி மாணவி பலி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி செந்தமிழ் செல்வன் மகள் கனிமொழி (15), இந்த மாணவி திருச்சி மாவட்டம் அரவனூரில் உள்ள தனது மாமா வீட்டில் இருந்து உறையூர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.பள்ளி விடுமுறைக்காக தனது சொந்த ஊரான மருதூர் கிராமத்திற்கு வந்த கனிமொழி இன்று காலை 5. 45 மணி அளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே இருப்பு பாதையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக சென்னையில் இருந்து மங்களூர் சென்ற விரைவு ரயில் மோதியதில் பள்ளி மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.பள்ளி விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்கு வந்த பள்ளி மாணவி இயற்கை உபாதை கழிக்க சென்று ரயிலில் மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

 

Tags :

Share via

More stories