பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமைகள்

by Staff / 05-05-2023 03:41:48pm
பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் காட்டெருமைகள்

கொடைக்கானல் நகரையொட்டியுள்ள வனப்பகுதியில் காட்டெருமை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி அடிக்கடி நகர் பகுதியில் புகுந்து விடுகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் குடியிருப்பு பகுதியில் நிரந்தரமாக முகாமிட்டுள்ளன. நாயுடுபுரம் சாலை டெப்போ பகுதியில் பொதுமக்கள் சாலையிலேயே குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சிதறி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை காட்டெருமைகள் உண்பதால் உடல் நலம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் குப்பை தொட்டிகளில் குப்பைகளை கொட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வனத்துறையினர் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via