அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண்,  சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு 

by Editor / 01-10-2021 07:34:39pm
அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண்,  சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு 

 

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.


 மதிப்பெண், சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி உயர்வு வழங்கும் பொழுது, அவர்களுடைய மதிப்பெண் அடிப்படையிலும், சீனியர்களாக இருக்கிறார்களா என்பதை பொருத்து மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும்.. இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்த ஒன்றாகும். 


இதனை அடுத்து இந்த தீர்ப்பை நிறைய பேருக்கு அமல்படுத்தவில்லை என்று தனியார் சார்பாகவும்  அரசு ஊழியர்கள் சார்பாகவும், செயல்படுத்தாமல் பதவி கிடைக்காதவர்கள் சார்பாகவும் உச்ச நீதிமன்றத்தில் டிஎன்பிஎஸ்சி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது..இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம், தமிழகத்தில் மதிப்பெண், சீனியாரிட்டி அடிப்படையில் மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும். குறைந்த மதிப்பெண் பெற்றவருக்கு பதவி உயர்வு வழங்குவது ஏற்கமுடியாது என்று தெரிவித்து, இதனை  12 வாரங்களில் டிஎன்பிஎஸ்சி நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

 

Tags :

Share via