லாரியை வழி மறித்தது கரும்பை ருசிக்க தொடங்கிய யானை- போக்குவரத்து பாதிப்பு.

by Staff / 08-10-2022 12:52:38pm
லாரியை வழி மறித்தது கரும்பை ருசிக்க தொடங்கிய யானை- போக்குவரத்து பாதிப்பு.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே, உள்ள சர்க்கரை ஆலைக்கு தினசரி கரும்பு ஏற்றிக்கொண்டு ஹாசனுர், திம்பம், பண்ணாரி வழியாக லாரிகள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், கர்நாடகா மாநிலம், சாம்ராஜ் நகரில் இருந்து கரும்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சத்தியமங்கலம் சர்க்கரை ஆலை நோக்கி சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த யானை லாரியை வழி மறித்தது. பின்னர் லாரியில் இருந்த கரும்பை ருசிக்க தொடங்கியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

 

Tags :

Share via

More stories