எழுத்தாளர், சாவி பிறந்த தினம் இன்று..

by Editor / 10-08-2022 11:56:08am
எழுத்தாளர், சாவி பிறந்த தினம் இன்று..

வேலுார் மாவட்டம், ஆற்காடு அடுத்த மாம்பாக்கத்தில், 1916 ஆக., 10ல் பிறந்தவர், சா.விசுவநாதன். எழுத்துத் துறையில், 'சாவி' என, புனைப்பெயர் சூட்டிக்கொண்டார். நான்காம் வகுப்பு வரை தான், கல்வி பயின்றார். 'கல்கி' இதழில், உதவி ஆசிரியராக பணியாற்றினார். காந்திஜியின், நவகாளி யாத்திரையை நேரில் கண்டு, அது குறித்து எழுதினார்.

'கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர்' ஆகிய இதழ்களில் பணியாற்றினார். பின், 'சாவி' என்ற பெயரில், வார இதழைத் துவக்கி, பல ஆண்டுகள், அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மேலும், 'வெள்ளிமணி, பூவாளி, திசைகள், மோனா' ஆகிய பத்திரிகைகளையும் துவக்கினார். ஈ.வெ.ரா., காமராஜர், ராஜாஜி, கல்கி உள்ளிட்டோருடன், நெருங்கிப் பழகினார்.

சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ்குமார், மாலன், பாலகுமாரன் என, பல எழுத்தாளர்களை ஊக்குவித்து, வளர்த்தார். 'ஞானபாரதி' என்ற அமைப்பைத் துவக்கி, கலை மற்றும் பத்திரிகைத் துறையிலும் முத்திரை பதிப்போருக்கு, விருது வழங்கி, கவுரவித்து வந்தார். 2001 பிப்., 9ல் காலமானார்.

 

Tags :

Share via