மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ

by Staff / 07-07-2023 02:41:49pm
மீண்டும் அதிமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சோழவந்தான் தொகுதி முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மீண்டும் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்த மாணிக்கம் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் சமீபத்தில் இவர் பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்த நிலையில், மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். அண்மை காலமாக பாஜக, அதிமுக தலைவர்கள் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், முன்னாள் எம்எல்ஏ அதிமுகவில் ஐக்கியமானார்.
 

Tags :

Share via