குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒரே நாளில் 153 திருமணங்கள்

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் ஒவ்வொரு முகூர்த்த நாள்களிலும் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் திருமணங்களில் பங்கேற்க குறைந்த நபர்களே அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும் அங்கு ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஊரடங்கும் கடைபிடிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்று கிழமை முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் கட்டுப்பாடுகளுடன் நடந்தன.
இதில் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் மட்டும் ஒரே நாளில் 153 திருமணங்கள் நடைபெற்றது. இதில் மணமக்கள் சார்பில் 10 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
Tags :