விசைத்தறி அதிபரின் மனைவி தற்கொலை முயற்சி

by Staff / 20-03-2022 03:10:44pm
விசைத்தறி அதிபரின் மனைவி தற்கொலை முயற்சி

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வங்கிக் கடனை செலுத்தாத விசைத்தறி அதிபரின் மனைவியை வங்கி அதிகாரிகள் மிரட்டியதால் அவா் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  

கிரிச்சிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தசாமி தனது மனைவி ஜோதிமணி, இவா்கள் விசைத்தறி மற்றும் கால்நடைகள் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் தொழில் சம்பந்தமாக, பல்லடம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் கோவிந்தசாமி, ரூபாய் 50 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனையெடுத்து வங்கியில் பெற்ற கடனை செலுத்த தவறியதால், வட்டியுடன் ரூபாய் 65 லட்சம் வரை கடனை திருப்பி செலுத்த வேண்டும் என வங்கி ஊழியர்கள் கோவிந்தசாமி வீட்டிருக்கு வந்து மிரட்டியுள்ளனா்.
 
இதனால் மனவேதனையடைந்த கோவிந்தசாமி மனைவி ஜோதிமணி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனால் அப்பகுதியல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

 

Tags :

Share via
Logo