மதுவிருந்தில் நடனமாடிய பெண்கள் உட்பட 500 பேர் சிறைப்பிடிப்பு

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில் அனுமதியில்லாமல் மது விருந்து நடைபெறுவதாக தாம்பரம் காவல் ஆணையர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற மது ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர், நள்ளிரவு 1 மணி முதல் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சட்ட விரோதமாக மது விருந்து நடத்திய சென்னையை சேர்ந்த சைமனை போலீசார் கைது செய்தனர்.
மேலும், மது விருந்தில் நடனமாடிய 50 பெண்கள் உட்பட 500 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர், அவர்கள் அனைவரையும் காவல் ஆணையர் ரவி எச்சரித்து அனுப்பிவைத்தார்.
Tags :