கூடுதல் தளர்வுகள் என்ன? ஸ்டாலின் ஆலோசனை

by Editor / 02-07-2021 05:12:50pm
கூடுதல் தளர்வுகள் என்ன? ஸ்டாலின் ஆலோசனை


 

அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான தளர்வுகளை அறிவிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மாதம் (மே) 24-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. 7-வது முறையாக ஊரடங்கை ஜூலை 5ந் தேதி வரை ஒரு வார காலத்திற்கு நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அதில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் பாதிப்பின் அடிப்படையில் 3 வகையான மாவட்டங்களாக பிரித்து வெவ்வேறு வகையான கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் முதல்வர் அறிவித்துள்ளார்.
முதல் வகையில் கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும், 2ம் வகையில் அரியலூர், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 23 மாவட்டங்களும், 3ம் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களும் வருகின்றன.
இந்நிலையில்  முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.கொரோனா தொற்று மாநிலம் முழுவதும் குறைந்து இருப்பதால், கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.இதனை தொடர்ந்து மேலும் கூடுதல் தளர்வுகள் பற்றிய அறிவிப்பை முதலமைச்சர்வெளியிடுவார் என தெரிகிறது.

 

Tags :

Share via