80 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருந்து வேடசந்தூர் செல்லும் சாலையில் காளாஞ்சி பட்டி அருகே ஒட்டன்சத்திரம் தேர்தல் பறக்கும் படையினர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்திவேல் தலைமையிலான அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவ்வழியே தனியார் வங்கிக்கு சொந்தமான வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் பழனியில் இருந்து கரூரில் உள்ள தனியார் வங்கியின் கருவூலத்திற்கு அஜய் குமார் என்பவர் தலைமையில் பணம் எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது பின்னர் அவர்களிடம் வைத்திருந்த ஆவணத்தை சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் மேற்படி வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் 80 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சசி முன்னிலையில் பணத்தை ஒப்படைத்து, வட்டாட்சியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு பின்னர் ஒட்டன்சத்திரம் கருவூலத்தில் பணம் பத்திரமாக வைக்கப்பட்டது.
Tags : 80 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.