அரசு பள்ளி கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள் விவகாரம் - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்..

by Editor / 07-09-2024 12:20:52pm
அரசு பள்ளி கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள் விவகாரம் - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பட்டூர் நடுநிலைப் பள்ளியில் மாணவிகள் கழிவறை சுத்தம் செய்யும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவிதா மாணவிகளை வீடியோ எடுத்து வெளியிட்டதாக தலைமை ஆசிரியர் பாப்பா தெரிவித்து இருந்தார். 

இந்த நிலையில் பள்ளியில் பள்ளி கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற நிலையில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பாப்பா பணியிட மாற்றம் செய்து கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை.

இதேபோல் மேலாண்மை குழு உறுப்பினர் கவிதா மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கல்வி அதிகாரிகள் துறை சார்ந்து பரிந்துரை..

 

Tags : அரசு பள்ளி கழிவறை சுத்தம் செய்த மாணவர்கள் விவகாரம் - தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம்..

Share via