கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் பெண் தற்கொலை

by Admin / 06-08-2021 04:54:12pm
கணவர் குடித்து விட்டு தகராறு செய்ததால் பெண் தற்கொலை


   
கணவர் குடித்துவிட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டதால் மனமுடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி பழனியம்மாள் என்கிற வசந்தி (வயது 50).
 
கடந்த 5 வருடங்களுக்கு முன்பு இவரது முதல் கணவர் சென்னியப்பன் இறந்து விட்டார். இதனையடுத்து வசந்தி 2-வதாக கோபால் என்பவரை திருமணம் செய்தார். குடிபழக்கத்துக்கு அடிமையான கோபால் தினசரி மது குடித்து விட்டு வந்து வசந்தியிடம் தகராறு செய்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் வசந்தி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீப்பற்ற வைத்தார். கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் வசந்தி சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று வசந்தியை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் வசந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

 

Tags :

Share via