மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை எண்ணும் பணி தொடக்கம் - நேரலையில் ஒளிபரப்பு

by Editor / 09-05-2023 09:23:44am
மீனாட்சியம்மன் கோவில் உண்டியல் எண்ணிக்கை எண்ணும் பணி தொடக்கம் - நேரலையில் ஒளிபரப்பு

மதுரை மீனாட்சியம்மன் கோவில் சித்திரை திருவிழா 12 நாட்கள் நடைபெற்று முடிவடைந்த நிலையில் கடந்த மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது - இந்த பணிகள் கோவில் இணையதளத்தில் யூடியுப் பக்கத்தின் மூலமாக நேரலை செய்யப்பட்டுவருகிறது.
இந்த உண்டியல் எண்ணும் பணியில் இத்திருக்கோயிலின் தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள் திருக்கோயில் அலுவலர்கள், உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட நபர்கள்  கலந்து கொண்டுள்ளனர்.

 மீனாட்சியம்மன் கோவில் மற்றும் 10 உபகோயில்களின் உண்டியல் திறப்பு நடைபெற்றதன் முதல் எண்ணிக்கை முடியும் வரை கோவில் இணையதள பக்கத்தில் நேரலை செய்யப்பட்டுவருகிறது.
மீனாட்சியம்மன் கோயில் மற்றும் உப கோயில்களான தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோயில் மற்றும் முக்தீஸ்வரர் திருக்கோயில், செல்லூர் திருவாப்புடையார் திருக்கோயில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி  திருக்கோயில் உட்பட  10 உபகோயில் உண்டியல் திறக்கப்பட்டு  எண்ணப்பட்டுவருகிறது.

 

Tags :

Share via