சத்தீஸ்கர்நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட்டு அரசிடம் சரணடைந்துள்ளனா்.

by Admin / 14-02-2026 08:30:28am
சத்தீஸ்கர்நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட்டு அரசிடம் சரணடைந்துள்ளனா்.

சத்தீஸ்கர் மாநில துணை முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா செய்தியாளர் சந்திப்பில் 532 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் 2007 நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட்டு அரசிடம் சரணடைந்துள்ளதாகவும் 2004 நக்சலைட்டுகள் கடந்த 14 மாதங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏகே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் இன் சாஸ் துப்பாக்கிகள் உள்பட சுமார் 1100 ஆயுதங்களையும் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம் மார்ச் 31 2026க்குள் சத்தீஸ்கரில் நக்சலிசத்தை முற்றிலுமாக ஒழிக்க இலக்க நினைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை விட சரணடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சத்தீஸ்கர்நக்சலைட்டுகள் வன்முறையை கைவிட்டு அரசிடம் சரணடைந்துள்ளனா்.
 

Tags :

Share via
Logo