ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஏராளமான போலீஸ் குவிப்பு!!

by Editor / 26-04-2021 08:54:01am
ஸ்டெர்லைட் ஆலை முன்பு ஏராளமான போலீஸ் குவிப்பு!!

ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில் தூத்துக்குடியில் ஆலை முன்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றத்தை நாடியது. அதில் ஆலையை திறக்க அனுமதி அளித்தால் தினம் 500 டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்துதர முடியும் என தெரிவித்தது. இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்கலாம் என தெரிவித்தது. ஆனால் தமிழக அரசு அதனை கடுமையாக எதிர்த்தது.
 
தூத்துக்குடியில் இன்னொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை பார்க்க விரும்பவில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியது. அதனால் வேறு வழியில் ஆக்சிஜன் தயாரிக்கலாம் என தமிழக அரசு யோசனை கூறியது. அதற்கு மத்திய அரசு, தற்போது நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும், இல்லை என்றால் தமிழக அரசே எடுத்து நடத்தலாம் என கூறியது. ஆனால் தமிழக அரசே ஏற்று நடத்த வேதாந்தா நிறுவனம் மறுப்பு தெரிவித்தது.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காகவும், கொரோனா தொற்று அதிகரிப்பு குறித்தும் ஆலோசனை நடத்துவதற்காகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 9.15 மணிக்கு தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை அருகே நூற்றுக்கணக்கான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags :

Share via