திரையரங்கில் திரையின் பாதுகாப்புக்காக கம்பிவேலி

எஸ்.எஸ்.ராஜ்மௌலி இயக்கத்தில் ராம் சரண் - ஜூனியர் என்.டி.ஆர். நடித்துள்ள RRR திரைப்படம், நாளை மறுநாள் வெளியாகிறது.
இந்நிலையில், ஸ்ரீகாகுளத்தில் RRR திரைப்படம் வெளியாக உள்ள திரையரங்கம் ஒன்றில், திரைக்கு முன்னே உள்ள மேடையில் ரசிகர்கள் ஏறாமல் தடுக்கும் வகையில் கம்பி வேலியை திரையரங்க நிர்வாகம் அமைத்துள்ளது.
திரையில் நாயகர்களைப் பார்த்த உற்சாகத்தில் அந்த மேடையில் ஏறி ஆர்ப்பரிக்கும் ரசிகர்களால், திரைக்கு சேதம் ஏற்படுவதைத் தடுக்க இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags :