மறு சீரமைப்பு பணிகளுக்காக மதுரை ரயில் நிலையத்தில் நுழைவு வாயில் மாற்றி அமைப்பு
மதுரை ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. புதிய கட்டிடம் கட்டுவதற்காக, தற்போது கிழக்கு பக்கம் உள்ள பிரதான நுழைவு வாயில் அடைக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்த பிரதான நுழைவு வாயில் நவம்பர் 11 அன்று மாலை 3 மணி முதல் மூடப்படும். இதற்கு பதிலாக பயணிகளின் வசதிக்காக தற்போது உள்ள பயண சீட்டு பதிவு அலுவலகம் அருகே மாற்று நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நுழைவு வாயில் மூலமும் முதல் நடைமேடைக்கும், மற்ற நடைமேடைகளுக்கும் எளிதாக செல்ல முடியும். இது சம்பந்தமாக உரிய அறிவிப்பு பலகைகளும், வழி காட்டும் விளம்பரங்களும் வைக்கப்பட்டுள்ளன.
Tags : மறு சீரமைப்பு பணிகளுக்காக மதுரை ரயில் நிலையத்தில் நுழைவு வாயில் மாற்றி அமைப்பு