கேரளாவுக்கு சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்படும் கனிமவளம்-சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கடையநல்லூர் எம்.எல்.ஏ

by Editor / 30-04-2022 09:19:09pm
கேரளாவுக்கு சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்படும் கனிமவளம்-சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கடையநல்லூர் எம்.எல்.ஏ

கேரளாவுக்கு சட்டவிரோதமாக எடுத்துச்செல்லப்படும் கனிமவளம்- அதிமுக முக்கிய தலைவர்களின் ஒப்புதலை பெற்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர மனு அளித்த கடையநல்லூர் எம்.எல்.ஏ

சட்டவிரோதமாக கேரளாவுக்கு கல், எம்சேண்ட், ஜல்லி போன்ற கட்டுமான பொருட்கள் எடுத்துச்செல்லப்படுவதால் தமிழ்நாட்டில் அவற்றிற்குண்டான பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலை குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்,  முன்னாள் அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களுமான தங்கமணி, காமராஜ், விஜயபாஸ்கர்,நத்தம் விஸ்வநாதன், இசக்கி சுப்பையா,  சட்டமன்ற உறுப்பினர்கள் V.V.ராஜன் செல்லப்பா, செந்தில்நாதன், ராஜமுத்து சேகர் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்று, கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர 
தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா  தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி எண் 55-ன் கீழ் மனு அளித்தார்.

 

Tags :

Share via