தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் போராட்டம்

by Admin / 24-02-2023 12:49:08pm
தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் போராட்டம்

தமிழகத்திலுள்ள அனைத்து  கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்  மாவட்ட  ஆட்சித்தலைவர் அலுவலகம்  முன்பாக தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள்  பொது  நலச்சங்கத்தின்  சார்பாக ஆர்பாட்டம் செய்தனர்  .சென்னை  மாவட்ட  ஆட்சித் தலைவர் அலுவலகம் அமைந்துள்ள  வீதியில்   நூற்றுக்கணக்கான  கேபிள்  டிவி  ஆப்ரேட்டர்கள்  கையில்   பதாகை  ஏந்தி   ,மாநிலத் தலைவர் சகிலன்  தலைமையில் கோரிக்கைளை  வலியுறுத்தி  ஆர்பாட்டம் செய்தனர் .மார்ச்  மாதத்திலிருந்து தனியார்தொலைக்காட்சிகளின் கட்டண உயர்வை தொலை தொடர்பு  ஒழுங்கு முறை  ஆணையம்  நீக்கவேண்டும் என்றும்  கட்டண உயர்வின்  மூலம்  சாதார ண  மக்களுக்கு கூடுதல் கட்டணச்சுமை ஏற்படும்  என்றும்  க ட்டண உயர்வை  அனுமதித்தால்   சுய தொழிலாக   நடத்தி  வரும்   கேபிள்  டிவி  ஆப்ரேட்டர்கள்   வாழ்வாதாரம்  பாதிக்கப்படும்  என்றும்   ட்ராய் ,தமிழக  முதலமைச்சரும்  இதில்  தலையிட்டு  கட்டண உயர்வை  தடுக்க வேண்டும் என்றும் ஆர்பாட்ட முழக்கத்தின் முக்கிய  அம்சமாக இருந்தது.

தமிழகம் முழுவதும் கேபிள் டி.வி.ஆப்ரேட்டர்கள் போராட்டம்
 

Tags :

Share via

More stories

Logo