எங்குமே டங்ஸ்டன் திட்டம் வராது விரைவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார்-அண்ணாமலை,

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ.வல்லளாப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஹிந்துஸ்தான் ஜிங் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.இதனைக் கண்டித்தும் இப்பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வழங்கிய அனுமதியை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் , அரிட்டாபட்டி, அ.வல்லளாப்பட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இப்பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக முல்லை பெரியாறு ஒரு போக பாசன விவசாயிகள் சங்கம் சார்பிலும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில். இன்று, அ.வல்லளாப்பட்டி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து, மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து எடுத்துரைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது.மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காத காரணத்தால் தான் டங்ஸ்டன் சுரங்க ஏலம் கொடுக்கப்பட்டது.மத்திய அரசுக்கு இந்த திட்டத்தால் 1 ரூபாய் கூட வருமானம் கிடையாது.மாநில அரசுக்கு தான் வருவாய் இருக்கும்.மத்திய அரசு ஏலம் மட்டுமே கொடுக்கும் அதிகாரம் உண்டு.இந்த பகுதியில் எங்குமே டங்ஸ்டன் திட்டம் வராது என்ற உத்தரவாத்தை அளிக்கிறோம்.விரைவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார்.மக்கள் மீது போடப்பட்ட வழக்கை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்,இந்த பகுதிகளில் EC எடுப்பதற்கான தடையை அரசு நீக்கி உள்ளது. அதற்கு நன்றி.இனி இது போல் ஏலம் வந்தால் சரியான பதிலை மாநில அரசு அளிக்க வேண்டும். அப்போது தான் குழப்பம் வராமல் தடுக்கலாம்.மாநில அரசு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் தான் மத்திய அரசு இந்த விவகாரத்தில் செயல்பட்டது.பல்லுயிர் தளத்தை தவிர்த்து என்று மாநில அரசு குறிப்பிட்ட காரணத்தால் தான் மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டது.இந்த பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும்.செப்டம்பரில் மாநில அரசு அளித்த geological survey அடிப்படையில் தான் மத்திய அரசு ஏலம் கொடுத்தது.எனவும் நன்றியை தெரிவித்து மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்..
Tags : எங்குமே டங்ஸ்டன் திட்டம் வராது விரைவில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார்-அண்ணாமலை,