தென்காசி மாவட்டத்திலும் தொடர்மழை வேகமாக நிரம்பு நீர்த்தேக்கங்கள்,நிரம்பி வழியும் குளங்கள்.

by Editor / 14-11-2021 10:04:05pm
தென்காசி மாவட்டத்திலும் தொடர்மழை வேகமாக நிரம்பு நீர்த்தேக்கங்கள்,நிரம்பி வழியும் குளங்கள்.

தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது இந்த மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றது. தென்காசி மாவட்டத்திலுள்ள 466 குளங்களில் 320 குளங்கள் நிரம்பி வழிகின்றன. மேலும் தென்காசி மாவட்டத்திலுள்ள 5 நீர்த் தேக்கங்களில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. குண்டாறு நீர்த்தேக்கம் ஏற்க்கனவே நிரம்பி வழிந்தவண்ணமுள்ளது.இந்த நிலையில் அடவிநயினார்,

ராமநதி, கருப்பாநதி, கடனாநதி, ஆகிய நீர்தேக்கங்களுக்கு வனப்பகுதிகளில்  இருந்து நீர் தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே குண்டாறு நீர்த்தேக்கம் நிரம்பி வழிந்த நிலையில்  இன்று காலை நிலவரப்படி 128அடி உயரம் மட்டுமே நீர் இருந்த  அடவி நயினார் கோவிலில் இன்று ஒரு நாள் பெய்த மழையின் காரணமாக 6 அடி நீர் வரத்து அதிகரித்து  முழு கொள்ளளவான 132 அடியை எட்டி  மறுகால் விழத்தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்ததுள்ளனர்.மேலும் 60கன அடி நீர் வனப்பகுதியிலிருந்து வந்துகொண்டு இருக்கிறது அந்த நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும் நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் வெள்ளநீர் ஆறுகளில் செல்வதால் கரையோரமக்களுக்கு  வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories