இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதில் கட்டிடங்கள் குலுங்கின சுமத்ரா தீவில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் நில அதிர்வு உணரப்பட்டதுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பொருட்சேதமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் நிலநடுக்கப் பகுதியில் குடியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடான பிலிப்பைன்சையும் செய்யும் நிலநடுக்கம் தாக்கியுள்ளதால் குடியிருப்புகளையும் விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
லுஸ்ன் தீவில் உள்ள மோரோங்கில் அதிகாலை நில அதிர்வு உணரப்பட்டது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :