புளியறை அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி திருக்கோவில் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா

by Editor / 23-04-2023 11:55:36am
புளியறை அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி திருக்கோவில் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா

தமிழக கேரள எல்லையான மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள புளியறையில் அமைந்துள்ளது 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாசி அம்மாள் சமேத சதாசிவ மூர்த்தி அருள்மிகு தக்ஷிணாமூர்த்தி திருக்கோவில் இந்த ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா கடந்த 19ஆம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது காலை 9 மணிக்கு லட்ச்சார்ச்சனை 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது இதன் தொடர்ச்சியாக சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை சிறப்பு அபிஷேகம் தீபாராதனை உள்ளிட்டவையில் நடைபெற்றன குரு பெயர்ச்சித்தினமான இன்று காலை 9 மணிக்கு தேவாரம் இன்னிசை நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் இரவு 7 மணிக்கு ருத்ர ஏகாதேசியும் நடைபெற்றது. இரவு 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நிகழ்வு நடைபெற்றது மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் பிரவேசிக்கும் நிகழ்வு நடைபெற்றது இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன இந்த நிகழ்வில் தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சிறப்பு பூஜையில் பங்கேற்றனர் இதன் தொடர்ச்சியாக காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மாலை நாலு மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரையிலும் திருநடை திரக்கப்பட்டு இருந்தது. மேலும் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் நடை திறந்திருக்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இரண்டு டிஎஸ்பிக்கள் தலைமையில் இரண்டு இன்ஸ்பெக்டர்கள் 10 உதவி ஆய்வாளர்கள் 200க்கும் மேற்பட்ட போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் தொடர்ந்து ஆங்காங்கு பக்தர்களுக்கு குடிநீர் வசதிகளும் செய்யப்பட்டிருந்தன பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via