எனது நண்பர் கேப்டன் விஜயகாந்த்- கமல்ஹாசன் புகழாரம்

நடிகரும், மக்கள் நீதி மய்ய தலைவருமான கமலஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், "இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” எனும் வரிகளுக்கேற்ப வாழ்ந்தவர் எனது நண்பர், கேப்டன் விஜயகாந்த். ஈகையும், வீரமும் இதயத்தில் ஏந்திய நண்பரின் நினைவுகளை அவரது பிறந்த நாளில் போற்றுகிறேன் என விஜயகாந்த் பிறந்தநாள் குறித்து பதிவிட்டுள்ளார். பல்வேறு பிரபலங்களும் விஜயகாந்த் பிறந்தநாள் குறித்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :