ராகுல்காந்தி-சோனியாகாந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு.

by Admin / 30-11-2025 01:39:47pm
ராகுல்காந்தி-சோனியாகாந்தி மீது எப்.ஐ.ஆர் பதிவு.

ராகுல் காந்தி ,சோனியா காந்தி உள்பட ஆறு பேர் மற்றும் 3 நிறுவனங்கள் மீதும் மீது டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு, அமலாக்க இயக்குனரகத்தின் புகாரின் அடிப்படையில் புதிய எஃப் .ஐ .ஆர் .ஐ பதிவு செய்துள்ளது. அசோசியட் ஜர்னல்ஸ் லிமிடெட் சொத்துக்களை சட்ட விரோத.மாக கைப்பற்ற சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது இந்த குற்றச்சாட்டுகளில் குற்றச் சரி ஏமாற்றுதல் நம்பிக்கை மீறுதல் முறைகேடாக பயன்படுத்துதல் ஆகியவை உள்ளடங்கும். இந்த புதிய குற்றப்பத்திரிக்கை அமலாக்க இயக்குனரகத்தின் தலைமை அலுவலக புலனாய்வு பிரிவின் புகாரை அடிப்படையாக க் கொண்டது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஏற்கனவே குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குற்றப் பத்திரிக்கையை டெல்லி நீதிமன்றம் டிசம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. இந்த வழக்கு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இது போலியானது என்றும் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனத்தை செய்துள்ளது.

 

Tags :

Share via