மகாத்மா காந்தி நினைவு நாளில் பிரதமர் மோடி அஞ்சலி
மகாத்மா காந்தியின் 74-வது நினைவு நாளை இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள தகவலில்:
பாபுவின் புண்ணிய திதியில் அவரை நினைவு கூர்கிறேன். அவரது உன்னத இலட்சியங்களை மேலும் பிரபலப்படுத்துவது எங்கள் கூட்டு முயற்சி.
தியாகிகள் தினமான இன்று, நமது தேசத்தை துணிச்சலுடன் பாதுகாத்த அனைத்து மாவீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம்.
அவர்களின் சேவை மற்றும் துணிச்சல் என்றென்றும் நினைவு கூரப்படும். இவ்வாறு பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















