நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களுக்கு விடுமுறை.

by Editor / 18-07-2024 08:51:01am
 நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களுக்கு விடுமுறை.

தமிழகத்தில் நீலகிரி மற்றும் கோயம்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு வானிலை மையம் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ஜூலை வாக்கில் உருவாக வாய்ப்புள்ளது.

இதனால் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (18.07.2024) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது.

அதேபோல் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கனமழை காரணமாக வால்பாறையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேப்போன்று நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : நீலகிரி மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய 4 வட்டங்களுக்கு விடுமுறை

Share via