அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் பி டி ஆர் கேள்வி

by Staff / 06-02-2024 01:50:41pm
அண்ணாமலை பேச்சுக்கு அமைச்சர் பி டி ஆர் கேள்வி

2026ல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்தவுடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் பேச்சுக்கு அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்த எக்ஸ் பதிவில், ஒரு ஒப்பீட்டுக்கு- தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம், பாஜக கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 கோடி அரசு வேலைகள் வழங்கப்படும் என்று, அதாவது, குழந்தைகள், ஓய்வு பெற்றவர்களையும் உள்ளிட்ட மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3-இல் ஒருவருக்கு அரசு வேலையாம் அல்லது, வேலை செய்யும் வயதில் இருப்பவர்களில் சுமார் பாதி பேர் அரசு பணி செய்யப்போகிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories