சமூக வலைதளங்களில் ஆபாசமான பேச்சுக்கள்; ரவுடி பேபி சூர்யா திருச்சி சாதனா உள்ளிட்டோர் மீது புகார்

by Admin / 05-07-2021 05:39:18pm
சமூக வலைதளங்களில் ஆபாசமான பேச்சுக்கள்; ரவுடி பேபி சூர்யா திருச்சி சாதனா உள்ளிட்டோர் மீது புகார்

சமூக வலைதளங்களில் ஆபாசமான பேச்சுக்கள்; ரவுடி பேபி சூர்யா திருச்சி சாதனா உள்ளிட்டோர் மீது புகார்

சமூக வலைதளங்களில் ஆபாச பேச்சுக்களை பதிவேற்றி வரும் ரவுடி பேபி சூர்யா போன்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் பிரமுகர் புனிதவள்ளி, சமூக ஆர்வலர் சுமித்ரா முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரர் காளிராஜ் ஆகியோர் கூட்டாக தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க  வந்தனர்.
சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி உள்ளிட்ட சிலர் ஆபாச பேச்சுகளை பேசியும் நடித்தும்  வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர் என்றும் ஆன்லைன் வகுப்புகளில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் இவர்களால் பாதிப்புக்குள்ளாவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags :

Share via

More stories