ஆளுனர் உரையுடன் தொடங்கியது சட்டப்பேரவை

by Admin / 09-01-2023 01:39:04pm
ஆளுனர் உரையுடன் தொடங்கியது சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டு முதல் கூட்டம் ஆளுனர் ஆர்.என்.ரவியின் ஆங்கில உரையுடன் தொடங்கியது.தமிழக அரசு தயாரித்து அளித்த ஆங்கிலஉரையை வாசித்து முடித்த ஆளுனரைத்தொடர்ந்து சபாநாயகர் அப்பாவுதமிழ்உரையை வாசித்து முடித்தார்.ஆளுனர் உரை தமிழக அரசு தயாரித்து கொடுத்தது போன்று இல்லாமல் ஆளுனர்பல வார்த்தைகளை நீக்கியும் புதிய வார்த்தைகளை சேர்த்தும் வாசித்துள்ளார்.விதி 17 ன்படி ஆளுனர் வாசித்த உரைசபையில் நிறைவேற்றப்படாது.அரசு தயாரித்து அளித்த ஆங்கில தமிழ் உரையே தீர்மானமாக நிறைவேற்றப்படும் என்றுமுதலமைச்சர் எழுந்து விளக்கமளித்தார்.அப்பொழுது அ.தி.மு.க இ.பி.எஸ் அணியினர் வெளியேற..முதலமைச்சர்சட்டப்பேரவையில்பேசிக்கொண்டருக்கையில் ஆளுனரும் வெளியேறினார்.சிறிது நேரம் தம் இருக்கையில் அமர்ந்தமுதலமைச்சர் மீண்டும் தம் கருத்தை கூறி..அரசு தயாரித்த உரையை ஒருமனதாக நிறைவேற்றிட வேண்டினார்.பின்னர்ஆளுனர் உரை நிறைவேற்றப்பட்டது.அ.தி.மு.க ஒ.பி.எஸ் அணியினர் இறுதிவரை நிகழ்ச்சியில் பங்கேற்றனர் .இதனைத்தொடர்ந்து சட்டப்பேரவைக்கு வெளியே ..செய்தியாளர்களைச்சந்தித்த எதிர்க்கட்சித்தலைவர்எடப்பாடி பழனிசாமிஆளுனர்   உரையில் எந்த திட்டமும் இல்லை.அது ஒருவெற்று உரை என்றும் ஆளுனர் உரையின் பொழுது முதல்வர்பேசியது மரபுக்கு எதிரானது என்றார்.ஆளுனர் உரையில் திராவிடமாடல்.தமிழகம் அமைதிப்பூங்காவாகத்திகழ்கபெரியார்,அண்ணா பெயர் விடுபட்டுப்போனது குறித்த கேள்விக்கு ஆளுனருக்கு உரை தயாரித்து கொடுத்தாலும் அவர்எதைவாசிப்பார் என்று தெரியாது என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக குற்றம் சாட்டினார்.

ஆளுனர் உரையுடன் தொடங்கியது சட்டப்பேரவை
 

Tags :

Share via