டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது.

by Editor / 25-06-2024 11:58:34pm
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது.

 

டெல்லி திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அவரை கைது செய்திருந்த நிலையில், சிபிஐயும் கைதுநடவடிக்கை எடுத்துள்ளது. நேற்று முன்தினம், அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் கேட்ட நிலையில் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக , கடந்த மாதம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. பரோல் முடிந்து, அவர் ஜூன் நான்காம் தேதி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்தது.

Share via