ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தை 14 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி மீட்ட மூதாட்டி

by Editor / 25-06-2024 10:53:18pm
 ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தை 14 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி மீட்ட மூதாட்டி

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஏ.எம்.பட்டி கிராமத்தைச் சேர்ந்த  மூதாட்டி மாடத்தி அம்மாள் (88). இவருக்கு தருவைகுளம் கிராமத்தில் சர்வே எண் 24/5 மற்றும் 34/1A ஆகிய புல எண்களில்  83 சென்ட் விவசாய நிலம் இருந்துள்ளது.இந்தச் சூழ்நிலையில்  மூதாட்டி மாடத்தி அம்மன் நிலத்திற்கு முன்பாக  முத்தியாரா  என்ற தனியார் அனல் மின் நிலையம் இருந்துள்ளது. இதற்கிடையில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு மூதாட்டி மாடத்தி அம்மாளுக்கு சொந்தமான 83 சென்ட் நிலம் ஆள்மாறாட்டம் மூலமாக முத்தியாரா தனியார் அனல் மின் நிலையத்திற்கு பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேற்படி நிலம் வழியாக  தனியார்  மின் நிலையத்திலிருந்து முன்பாக ஈசிஆர் இணைக்கும் பிரதான சாலை அமைக்கப்பட்டுள்ளது.

தன்னுடைய நிலம் அபகரிக்கப்பட்டது குறித்து மாடத்தி அம்மாள் நில மோசடி தொடர்பாக கடந்த ஏழு வருடங்களுக்கும் முன்னதாக தூத்துக்குடி மாவட்ட  பதிவாளர் இடம் மனு அளித்துள்ளார்.
 இது குறித்து மாவட்ட பதிவாளர் உரிய விசாரணை மேற்கொண்டு மேற்படி ஆள் மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை அடுத்து தனியார் மின் நிலையம் சார்பில் திருநெல்வேலி மண்டல பதிவுத்துறை துணை தலைவரிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது .மேலும் திருநெல்வேலி மண்டல பதிவு துறை துணை தலைவர் விசாரணை மேற்கொண்டு ஆள் மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலம் தொடர்பாக மேற்படி தூத்துக்குடி மாவட்ட பதிவாளர் உத்தரவிட்ட  உத்தரவு பிறப்பித்தது செல்லும் என உறுதி செய்தார். 

இதையடுத்து மாடத்தி அம்மாள்  ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்து  மேற்படி சர்வே எண்களில் உள்ள 83 சென்ட் நிலத்தை தனது பெயருக்கு பட்டா மாற்றியுள்ளார். 

இதையடுத்து வருவாய்த் துறையினர் அளவீடு செய்து நிலத்தை மீட்டு மாடத்தி அம்மாளிடம்  ஒப்படைத்தது. இதையடுத்து போலீசார பாதுகாப்புடன்  மாடத்தி அம்மாள்  பெயரில் உள்ள 83 சென்ட் நிலத்தை அவரது மகன் பாலமுருகன்  பென்சிங் போட்டு அடைத்துள்ளார். 

14 ஆண்டுகளுக்கு முன்னதாக  ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தை மீண்டும்  மூதாட்டி மீட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இதுகுறித்து மாடத்தி அம்மாளின் பேரன் பெருமாள் கூறுகையில் எங்களது விவசாய நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து பத்திரப்பதிவு செய்யப்பட்ட நிலமானது  மீண்டும் 14 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களுக்கு கிடைத்திருக்கிறது. மேலும் அதில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையை அகற்றி விவசாய நிலமாக மாற்றி தர மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். 

 

Tags :  ஆள் மாறாட்டம் செய்து பத்திர பதிவு செய்யப்பட்ட இடத்தை 14 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி மீட்ட மூதாட்டி

Share via